விநாயகக்கடவுள்
 
1
கார்கொண்ட கவுள்மதக் கடைவெள்ள முங்கட்
                கடைக்கடைக் கனலும்எல்லை
        கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
                கடைக்கால் திரட்டஎங்கோன்

போர்கொண்ட எண்தோள் பொலன்குவடு பொதியும்வெண்
                பொடிதுடி அடித்துவைத்துப்
        புழுதியாட்டு அயராஒர் அயிர்ஆவ ணத்து உலவு
                போர்க்களிற்றைத் ஒதிப்பாம்

தார்கொண்ட மதிமுடி ஒருத்தன் திருக்கண்மலர்
                சாத்தக் கிளர்ந்துபொங்கித்
        தவழும்இள வெயிலும் மழ நிலவும் அள வளவலால்
                தண்என்று வெச்சென்றுபொன்

வார்கொண்ட தணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர
                வல்லி அபிராமவல்லி
        மாணிக்க வல்லி மரகதவல்லி அபிடேக
                வல்லிசொல் தமிழ்தழையவே
உரை