தொடக்கம் |
தாலப்பருவம்
|
|
23 |
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்பத் தீஅரும்பும் தேமா நிழற்கண் துஞ்சும்இளஞ் செங்கண் கயவாய்ப் புனிற்றுஎருமை இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்நின்று இழிபால்அருவி உவட்டுஎறிய எறியும் திரைத்தீம் புனல்பொய்கைப் பொன்னம் கமலப் பசுந்தோட்டுப் பொன்தாது ஆடிக் கற்றைநிலாப் பொழியும் தரங்கம் பொறைஉயிர்த்த பொன்போல் தொடுதோல் அடிப்பொலன்சூட்டு அன்னம் பொலியும் தமிழ்மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
24 |
வீக்கும் சிறுபைந் துகில்தோகை விரியும் கலாபம் மருங்குஅலைப்ப விளையாட்டு அயரும் மணல்சிற்றில் வீட்டுக் குடிபுக்கு ஓட்டிஇருள் சீக்கும் சுடர்தூங்கு அழல்மணியின் செந்தீ மடுத்த சூட்டுஅடுப்பில் செழுந்தாள் பவளத் துவர்அடுக்கித் தெளிக்கும் நறுந்தண் தேறல்உலை வாக்கும் குடக்கூன் குழிசியில்அம் மதுவார்த்து அரித்த நித்திலத்தின் வல்சி புகட்டி வடித்துஎடுத்து வயல்மா மகளிர் குழாம்சிறுசோறு ஆக்கும் பெருந்தண் பணைமதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயல்கண் அமுதே தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
25 |
ஓடும் படலை முகில்படலம் உவர்நீத்து உவரி மேய்ந்துகரு ஊறும் கமம்சூல் வயிறுஉடைய உகைத்துக் கடவுள் கற்பகப்பூங் காடும் தரங்கக் கங்கைநெடுங் கழியும் நீந்தி அமுதுஇறைக்கும் கலைவெண் மதியின் முயல்தடவிக் கதிர்மீன் கற்றை திரைத்துஉதறி மூடும் ககன வெளிக்கூட முகடு திறந்து புறம்கோத்த முந்நீர் உழக்கிச் சினவாளை மூரிச் சுறவி னோடும்விளை யாடும் பழனத் தமிழ்மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
26 |
ஊறும் கரடக் கடத்துமுகந்து ஊற்றும் மதமா மடவியர்நின் உதறும் குழல்பூந்துகள்டங்க ஓட விடுத்த குங்குமச்செஞ் சேறு வழுக்கி ஓட்டுஅறுக்கும் திருமா மறுகில் அரசர்பெரும் திண்தேர் ஒதுங்கக் கொடுஞ்சிநெடும் சிறுதேர் உருட்டும் செங்கண்மழ ஏறு பொருவேல் இளைஞர்கடவு இவுளி கடைவாய் குதட்டவழிந்து இழியும் விலாழி குமிழிஎறிந்து இரைத்துத் திரைத்து நுரைத்தொருபே ராறு மடுக்கும் தமிழ்மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
27 |
வார்க்குன்று இரண்டு சுமந்துஒசியும் மலர்க்கொம்பு அனையார் குழல்துஞ்சும் மழலைச் சுரும்பர் புகுந்துஉழக்க மலர்த்தாது உகுத்து வான்நதியைத் தூர்க்கும் பொதும்பில் முயல்கலைமேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கிக் கழினியின்நெல் சூட்டுப் படப்பை மேய்ந்துகதிர்ப் போர்க்குன்று ஏறுங் கருமுகிலை வெள்வாய் மள்ளர் பிணையலிடும் பொருகோட்டு எருமைப் போத்தினொடும் பூட்டி அடிக்க இடிக்குரல்விட்டு ஆர்க்கும் பழனத் தமிழ்மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயல்கண் அமுதே தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
28 |
(வேறு) காரில் பொழிமழை நீரில் சுழிஎறி கழியில் சிறுகுழியில் கரையில் கரைபொரு திரையில் தலைவிரி கண்டலில் வண்டலின்நெற் போரில் களநிறை சேரின் குளநிறை புனலில் பொருகயலில் பொழிலில் சுருள்புரி குழலில் கணிகையர் குழையில் பொருகயல்போய்த் தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொருவில்வரிச் சிலையில் திரள்புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்தமுடித் தாரில் பொருதிடும் மதுரைத் துரைமகள ் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
29 |
சேனைத் தலைவர்கள் திசையின் தலைவர்கள் செருவின் தலைவர்களால் சிலையில் தடமுடி தேரின் கொடியொடு சிந்தச் சிந்திஇடும் சோனைக் கணைமழை சொரியப் பெருகிய குருதிக் கடல்இடையே தொந்த மிடும்பல் கவந்தம் நிவந்துஒரு சுழியில் பவுரிகொள ஆணைத் திரளொடு குதிரைத் திரளையும் அப்பெயர் மீனைமுகந்து அம்மனை ஆடு கடல்திரை போல அடல்திரை மோதஎழும் தானைக் கடலொடு பொலியும் திருமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
30 |
அமரர்க்கு அதிபதி வெளிறக் களிறுஎதிர் பிளிறக் குளிறியிடா அண்ட மிசைப் பொலி கொண்டல் உகைத்திடும் அமரில் தமரினொடும் கமரில் கவிழ்தரு திசையில் தலைவர்கள் மலையில் சிறகுஅரியும் கடவுள் படையொடு பிறகிட்டு உடைவது கண்டு முகங்குளிராப் பமரத் தருமலர் மிலையப் படுமுடி தொலையக் கொடுமுடி தாழ் பைம்பொன் தடவரை திரியக் கடல்வயிறு எரியப் படைதிரியாச் சமரில் பொருதிரு மகனைத் தருமயில் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
31 |
முதுசொல் புலவர் தெளித்த பசுந்தமிழ் நூல்பாழ் போகாமே முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே அதிரப் பொருது கலிப்பகை ஞன்தமிழ் நீர்நாடு ஆளாமே அகிலத்து உயிர்கள் அயர்த்தும் அறங்கடை நீள்நீர் தோயாமே சிதைவுற்று அரசியல் நல்தரு மம்குடி போய்மாய்வு ஆகாமே செழியர்க்கு அபயரும் ஒப்புஎன நின்றுஉண ராதார் ஓதாமே மதுரைப் பதிதழை யத்தழை யும்கொடி தாலோ தாலேலோ மலயத் துவசன் வளர்த்த பசுங்கிளி தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|
32 |
தகரக் கரிய குழற்சிறு பெண்பிளை நீயோ தூயோன்வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்றெதிர் சீறா வீறோதா நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபி ரானோ டேஓடா நிலைகெட்டு உலைய உடற்றஉ டைந்துஒர் ஆனேறு ஆகாமே சிகரப் பொதிய மிசைத்தவ ழும்சிறு தேர்மே லேபோய்ஓர் சிவனைப் பொருத சமர்த்தன்உ கந்துஅருள் சேல்போல் மாயாமே மகரத் துவசம் உயர்த்தபொ லன்கொடி தாலோ தாலேலோ மலயத் துவசன் வளர்த்தப சுங்கிளி தாலோ தாலேலோ |
|
உரை
|
|
|
|