தொடக்கம் |
சப்பாணிப்பருவம்
|
|
33 |
நாளவட் டத்தளிம் நளினத்தொ டும்துத்தி நாகஅணையும் விட்டொர்எட்டு நாட்டத்த னும்பரம வீட்டத்த னும்துஞ்சு நள்இருளின் நாப்பண்அண்ட கோளவட் டம்பழைய நேமிவட் டத்தினொடு குப்புற்று வெற்புஎட்டும்ஏழ் குட்டத்தி னில்கவிழ மூதண்ட வேதண்ட கோதண்ட மோடுசக்ர வாளவட் டம்சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்தநித்த வட்டத்தி னுக்குஇசைய ஒற்றிக்க னத்ததன வட்டத்தை ஒத்திட்டதுஓர் தாளவட் டம்கொட்டு கைப்பாணி ஒப்பஒரு சப்பாணி கொட்டிஅருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டிஅருளே |
|
உரை
|
|
|
|
34 |
பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடிஞ்சிப் பொலந்தேரொடு அமர்அகத்துப் பொன்மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்றுஅம்மை பொம்மல்முலை மூன்றில்ஒன்று கைவந்த கொழுநரொடும் உள்ளப் புணர்ச்சிக் கருத்தான் அகத்துஒடுங்கக் கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வைத் திடும்ஒரு கடைக்கண்நோக்கு அமுதம்ஊற்ற மெய்வந்த நாணினொடு நுதல்வந்து எழுங்குறு வெயர்ப்பினொடு உயிர்ப்புவீங்கும் விம்மிதமு மாய்நின்ற உயிர்ஓவம் எனஊன்று விற்கடை விரல்கடைதழீ இத் தைவந்த நாணினொடுதவழ்தந்த செங்கைகொடு சப்பாணி கொட்டிஅருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டிஅருளே |
|
உரை
|
|
|
|
35 |
பூமரு வெடிப்பமுகை விண்டதண் டலைஈன்ற புனைநறுந் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம்பெய்து புழுதிவிளை யாட்டுஅயர்ந்தும் காமரு மயில்குஞ்சு மடஅனப் பார்ப்பினொடு புறவுபிற வும்வளர்த்தும் காந்தள்செங் கமலத்த கழுநீர் மணந்துஎனக் கண்பொத்தி விளையாடியும் தேமரு பசுங்கிள்ளை வைத்துமுத்து ஆடியும் திரள்பொன் கழங்குஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கைச் சிவப்புஊறு சேயிதழ் விரிந்ததெய்வத் தாமரை பழுத்தகைத் தளிர்ஒளி துளும்பஒரு சப்பாணி கொட்டிஅருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டிஅருளே |
|
உரை
|
|
|
|
36 |
விண்ணளிக் கும்சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த வீடும் கடம்புபொதி காடும் தடம்பணை விரிந்ததமிழ் நாடும்நெற்றிக் கண்அளிக் கும்சுந் தரக்கடவுள் பொலியும்அறு கால்பீட மும்எம்பிரான் காமர்பரி யங்கக் கவின் தங்கு பள்ளிஅம் கட்டிலும் தொட்டில்ஆகப் பண்அளிக் கும்குதலை அமுதுஒழுகு குமுதப் பசுந்தேறல் ஊறல்ஆடும் பைங்குழவி பெருவிரல் சுவைத்துநீ பருகிடப் பைந்தேறல் ஊறுவண்கைத் தண்அளிக் கமலம் சிவப்புஊற அம்மைஒரு சப்பாணி கொட்டிஅருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டிஅருளே |
|
உரை
|
|
|
|
37 |
சேல்ஆட்டு வாள்கண் கருங்கடல் கடைமடை திறந்துஅமுதம் ஊற்றுகருணைத் தெண்திரை கொழித்துஎறிய வெண்திரை நெருப்பூட்டு தெய்வக் குழந்தையைச்செங் கோல்ஆட்டு நின்சிறு கணைக்கால் கிடத்திக் குளிப்பாட்டி உச்சிமுச்சிக் குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பும் இட்டுவளர் கொங்கையில் சங்குவார்க்கும் பாலாட்டி வாய்இதழ் நெரித்துஊட்டி உடலில் பசுஞ்சுண்ண மும்திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த் திச்சிறு பரூஉமணித் தொட்டில்ஏற்றித் தாலாட்டி ஆட்டுகைத் தாமரை முகிழ்த்துஅம்மை சப்பாணி கொட்டிஅருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டிஅருளே |
|
உரை
|
|
|
|
38 |
(வேறு) வானத்து உருமொடு உடுத்திரள் சிந்த மலைந்த பறந்தலையின் மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர் மற்றவர் பொன்தொடியார் பானல் கணையும் முலைக்குவ டும்பொரு படையில் படஇமையோர் பைங்குடர் மூளையொ டும்புதிது உண்டு பசுந்தடி சுவைகாணாச் சேனப் பந்தரின் அலகைத் திரள்பல குரவை பிணைத்துஆடத் திசையில் தலைவர்கள் பொருநாண் எய்தச் சிறுநாண் ஒலிசெய்யாக் கூனல் சிலையின் நெடுங்கணை தொட்டவள் கொட்டுக சப்பாணி குடைநிழ லில்புவி மகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி |
|
உரை
|
|
|
|
39 |
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமர்ஆடத் தண்ட தரன்செல் கரும்பகடு இந்திரன் வெண்பகடோடு உடையாத் திமிரக் கடல்புக வருணன் விடும்சுறவு அருணன் விடும்கடவுள் தேரின் உகண்டுஎழு வார்வில் வழங்கு கொடுங்கோல் செங்கோலா இமயத் தொடும்வளர் குலவெற்பு எட்டையும் எல்லைக் கல்லின்நிறீஇ எண்திசை யும்தனி கொண்டு புரந்து வடாது கடல்துறைதென் குமரித் துறைஎன ஆடும் மடப்பிடி கொட்டுக சாப்பாணி குடைநிழ லில்புவி மகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி |
|
உரை
|
|
|
|
40 |
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியில் ஆளிஎனச் செருமலை செம்மலை முதலியர் சிந்தச் சிந்திட நந்திபிரான் நின்றிஇலன் ஓடலும் முன்னழ கும்அவன் பின்னழ கும்காணா நிலவுவி ரிந்திடு குறுநகை கொண்டு நெடுங்கயி லைக்கிரியின் முன்றிலி ன்ஆடல் மறந்துஅம ர்ஆடிஒர ் மூரிச் சிலைகுனியா முரிபுரு வச்சிலை கடைகுனி யச்சில முளரிக் கணைதொட்டுக் குன்றவி லாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி |
|
உரை
|
|
|
|
41 |
(வேறு) ஒழுகிய கருணைஉ வட்குஎழு வைத்தஅ ருள்பார்வைக்கு உளநெகிழ் அடியர்ப வக்கடல் வற்றஅ லைத்துஓடிக் குழையொடு பொருதுகொ லைக்கணை யைப்பிணை யைச்சீறீக் குமிழொடு பழகிம தர்த்தக யல்கண்ம டப்பாவாய் தழைகெழு பொழிலின்மு சுக்கலை மைப்புய லில்பாயத் தவழ்இள மதிகலை நெக்குகு புத்துஅமு தத்தோடே மழைபொழி இமயம யில்பெடை கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மடப்பிடி கொட்டுக சப்பாணி |
|
உரை
|
|
|
|
42 |
செழுமறை தெளியவ டித்தத மிழ்ப்பதி கத்தோடே திருஅருள் அமுதுகு ழைத்துவி டுத்தமு லைப்பாலால் கழுமல மதலைவ யிற்றைநி ரப்பிம யில்சேயைக் களிறொடும் வளரவ ளர்த்தஅ ருள்செவி லித்தாயே குழல்இசை பழகிமு ழுப்பிர சத்துஇர சத்தோடே குதிகொளும் நறியக னிச்சுவை நெக்கபெ ருக்கேபோல் மழலையின் அமுதுஉகு சொற்கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மடப்பிடி கொட்டுக சப்பாணி |
|
உரை
|
|
|
|