தொடக்கம் |
ஊசற்பருவம்
|
|
93 |
ஒள்ஒளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும் ஒழுகுஒளிய வயிரவிட்டத்து ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய ஒண்தரள வடம்வீக்கியே அள்ளிட வழிந்துசெற்று ஒளிதுளும் பும்கிரண அருணரத் னப்பலகைபுக்கு ஆடுநின் தோற்றம்அப் பரிதிமண் டலம்வளர் அரும்பெரும் சுடரைஏய்ப்பத் தெள்ளுசுவை அமுதம் கனிந்தஆ னந்தத் திரைக்கடல் மடுத்துஉழக்கும் செல்வச் செருக்கர்கள் மனக்கமல நெக்கபூஞ் சேக்கையில் பழையபாடல் புள்ஒலி எழக்குடி புகுந்தசுந் தரவல்லி பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
94 |
விற்பொலிய நிலவுபொழி வெண்நித் திலம்பூண்டு விழுதுபட மழகதிர்விடும் வெண்தரள ஊசலின் மிசைப்பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்துமதுரச் சொல்பொலி பழம்பாடல் சொல்லுகின் றவளும்நின் சொருபம்என் பதும்இளநிலாத் தூற்றுமதி மண்டலத்து அமுதமாய் அம்மைநீ தோன்றுகின் றதும்விரிப்ப எல்பொலிய ஒழுகுமுழு மாணிக்க மணிமுகப்பு ஏறிமழை முகில்தவழ்வதுஅவ் எறிசுடர்க் கடவுள்திரு மடியில்அவன் மடமகள் இருந்துவிளை யாடல்ஏய்க்கும் பொன்புரிசை மதுரா புரிப்பொலி திருப்பாவை பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
95 |
உருகிய பசும்பொன் அசும்பவெயில் வீசுபொன் ஊசலை உதைந்துஆடலும் ஒண்தளிர் அடிச்சுவடு உறப்பெறும் அசோகுநறவு ஒழுகுமலர் பூத்துஉதிர்வதுஉன் திருமுன்உரு வம்கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்குஇதுவெனாச் செஞ்சிலைக் கள்வன்ஒரு வன்தொடை மடக்காது தெரிகணைகள் சொரிவது ஏய்ப்ப எரிமணி குயின்றபொன் செய்குன்று மழகதிர் எறிப்பஎழு செஞ்சோதிஊடு இளமதி இமைப்பதுஉன் திருமுகச் செவ்விவேட்டு டெழுநாத் தலைத்தவம்அவன் புரிவது கடுக்கும்மது ராபுரி மடக்கிள்ளை பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
96 |
கங்கைமுடி மகிழ்நர்திரு உளம்அசைந் ஆடக் கலந்துஆடு பொன்ஊசல்அக் கடவுள்திரு நோக்கத்து நெக்குஉருகி யிடநின் கடைக்கண்நோக் கத்துமற்றுஅச் செங்கண்விடை யவர்மனமும் ஒக்கக் கரைந்துஉருகு செய்கையவர் சித்தமேபொன் திருஊச லாஇருந்து ஆடுகின் றாய்எனும் செய்தியை எடுத்துஉரைப்ப அங்கண்நெடு நிலம்விடர் படக்கிழித்து ஓடுவேர் அடியில் பழுத்தபலவின் அளிபொன் சுளைக்குடக் கனிஉடைந்து ஊற்றுதேன் அருவிபிலம் ஏழும்முட்டிப் பொங்கிவரு பொழில்மதுர மதுரைநா யகிதிருப் பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
97 |
சேர்க்கும் சுவைப்பாடல் அமுதுஒழுக ஒழுகுபொன் திருஊசல் பாடிஆடச் சிவபிரான் திருமுடிஅசைப்பமுடி மேல்பொங்கு செங்கண்அரவு அரசுஅகிலம்வைத்து ஆர்க்கும் பணாடவி அசைப்பச் சராசரமும் அசைகின்றது அம்மனைஅசைந்து ஆடலால் அண்டமும் அகண்டபகிர் அண்டமும் அசைந்துஆடு கின்றதுஏய்ப்பக் கார்க்கொந் தளக்கோதை மடவியர் குழல்கூட்டு கமழ்நறும் புகைவிண்மிசைக் கைபரந்து எழுவதுஉரு மாறுஇரவி மண்டலம் கைக்கொளஇருள்படலம்வான் போர்க்கின்ற தொக்குமது ராபுரி மடக்கிள்ளை பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
98 |
தேர்க்கோல மொடுநின் திருக்கோல மும்கண்டு சிந்தனை புழுங்குகோபத்தீ அவிய மூண்டெழும் காமா னலம்கான்ற சிகைஎன எழுந்துபொங்கும் தார்க்கோல வேணியர்தம் உள்ளம்என வேபொன் தடம்சிலையும் உருகிஓடத் தண்மதி முடித்ததும் வெள்விடைக்கு ஒள்மணி தரித்ததும் விருத்தமாகக் கார்க்கோல நீலக் கருங்களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்றுஅலமரக் கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடுஒரு கைவில் குனித்துநின்ற போர்க்கோல மேதிரு மணக்கோலம் ஆனபெண் பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
99 |
குழியும் பசுங்கண் முசுக்கலை வெரீஇச்சிறு குறும்பலவின் நெடியபாரக் கொம்புஒடி படத்தூங்கு முள்புறக் கனியின் குடங்கொண்டு நீந்தமடைவாய் வழியும் கொழுந்தேன் உவட்டுஎழு தடங்காவின் வள்உகிர்க் கருவிரல்கூன் மந்திகள் இரிந்துஏகும் விசையினில் விசைந்துஎழு மரக்கோடு பாயவயிறு கிழியும் கலைத்திங்கள் அமுதுஅருவி தூங்குவ கிளைத்தவண்டு உழுபைந்துழாய்க் கேசவன் கால்வீச அண்டகோ ளகைமுகடு கீண்டுவெள் அருவிபொங்கிப் பொழியும் திறத்தினை நிகர்க்கும்மது ரைத்தலைவி பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
100 |
ஒல்கும் கொடிச்சிறு மருங்குல்கு இரங்கிமெல் ஓதிவண்டு ஆர்த்துஎழப்பொன் ஊசலை உதைந்துஆடும் அளவின்மலர் மகள்அம்மை உள்அடிக் கூன்பிறைதழீஇ மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றுஇதுகொல் வாணிஎன் அசதிஆடி மணிமுறுவல் கோட்டநின் வணங்கா முடிக்குஒரு வணக்கநெடு நாண்வழங்கப் பில்கும் குறும்பனிக்கூதிர்க் குடைந்துஎனப் பிரசநாம் ஐம்பாற்குஇனம் பேதையர்கள் ஊட்டும் கொழும்புகை மடுத்துமென் பெடையொடு வரிச்சுரும்பர் புல்கும் தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
101 |
கொன்செய்த செழுமணித் திருஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்தொறும் குறுமுறுவல் நெடுநிலவு அருந்தும் சகோரமாய்க் கூந்தல்அம் கற்றைசுற்றும் தென்செய்த மழலைச் சுரும்பராய் மங்கைநின் செங்கைப் பசுங்கிள்ளையாய்த் தேவதே வன்பொலிவதும் எவ்உருவு மாம்அவன் திருவுருவின் முறைதெரிப்ப மின்செய்த சாயலவர் மேல்தலத்து ஆடிய விரைப்புனலின் அருவிகுடையும் வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட மென்பிடியை அஞ்சிநிற்கும் பொன்செய்த மாடமலி கூடல் பெருஞ்செல்வி பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|
102 |
இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறைஇட்டு் இரைத்திடும் அரிச்சிலம்பும் இறும்இறும் மருங்குஎன்று இரங்குமே கலையும்பொன் எழுதுசெம் பட்டுவீக்கும் திருவிடையும் உடைதார மும்ஒட் டியாணமும் செங்கைப் பசுங்கிள்ளையும் திருமுலைத் தரளஉத் தரியமும் மங்கலத் திருநாணும் அழஒழுகநின்று அருள்பொழியும் மதிமுகமும் முகமதியின் நெடுநிலவு அரும்புகுறு நகையும்ஞான ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு அமராடும் ஓடரிக்கண் பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |
|
உரை
|
|
|
|