விரைத்த டம்பொழில்
வரைமணி ஆசனத்
திருந்துவிண்
ணவர்போற்றி
வரைத்த டம்புரை மழவிடை எம்பிரான்
மனமகிழ்த் திடவாக்கால்
இரைத்த பல்கலைப் பரப்பொலாந் திரட்டிமற்
றிதுபொரு ளெனமேனாள்
உரைத்த தேசிகா செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே
உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.
|