மாதுநாயகம் எனைவடி வுடையசீர் வள்ளிநா யகமண்ணில்
ஈது நாயகம் எனவுனை யன்றிவே றெண்ணநா யகம்உண்டோ
போது நாயகன் புணரியின் நாயகன் பொருப்புநா யகன்போற்றி
ஓது நாயக செந்தில்வாழ் கந்தனே உருட்டுக சிறுதேரே
உரக நாயகன் பஃறலை பொடிபட உருட்டுக சிறுதேரே.