வீறாட வெங்கதிர்ப்
புகர்முகக் கூரிலை
மிகுத்தவே லுறை கழித்து
வெவ்வாய்
பிளந்துசிறு கட்பேர் இடாகினிகள்
விளையாட வெங்க வந்த
மாறாட முதுபகட்
டுயர்பிடர்க் கரியநிற
மறலிஇரு கைச லித்து
மன்றாட
உடல்விழிக் குரிசல்கொண் டாடநெடு
மாகமுக
டிடைவெ ளியறப்
பாறாட அம்பொற்
கிரீடம் பரித்தலகை
பந்தாட
விந்தா டவிப்
பாலைக்
கிழத்திமுக் கவரிலைச் சூலம்
பசுங்கொழுங் குருதி வெள்ளச்
சேறாட வென்றுசிறு
முறுவலா டுங்குமர
செங்கீரை
யாடி யருளே
செந்திறக்
குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை
யாடி யருளே.
|