இந்திர னுஞ்சசி
யும்பர வும்படி
யிங்கே வந்தார்காண்
இந்திரை யுங்கர
சங்கமு குந்தனும்
இந்தா வந்தார்பார்
அந்தண னுங்கலை மங்கையு நின்சர
ணஞ்சேர்
கின்றார்போய்
அண்டரு
டன்பல தொடர்ப ணிந்தனர்
அஞ்சே
லென்றாளாய்
முந்துத டந்திரை
யுந்துவ லம்புரி
மொண்டே கொண்டேக
முன்றில்தொ றுந்தர ளங்கள் உமிழ்ந்திட
முந்தூர்
நந்தூருஞ்
செந்தில்வ
ளம்பதி வந்தரு ளுங்குக
செங்கோ
செங்கீரை
தென்றல்ம
ணங்கமழ் குன்றுபு ரந்தவ
செங்கோ
செங்கீரை.
|