வரைபொரு
புளகித மலைமுலை அரிவையர்
வந்தார்
பந்தாட
மறிகட
லிறைதரு நவமணி வடமது
வண்டார்
தண்தார்பார்
உரையொரு கவிஞரு
முனிவரும் அமரரும்
உன்போ
லுண்டோதான்
உரையெமர்
வழிவழி யடிமையி துளதென
உன்பா
லன்பானார்
கரைபொரு கடறிட
ரெழமயில் மிசைவரு
கந்தா
செந்தூரா
கழிமட
அனமொடு முதுகுரு கொருபுடை
கண்சாய்
தண்கானல்
திரைபொரு திருநகர்
மருவிய குருபர
செங்கோ
செங்கீரை
செருவினில் எதிர்பொரு நிசிசரர் தினகர
செங்கோ
செங்கீரை.
|