பாம்பால் உததி தனைக்கடைந்து
படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
பரிய
வரையைக் குடைகவித்துப்
பசுக்கள் வெருவிப் பதறாமற்
காம்பால் இசையின் தொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையில் நிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும்
பூம்பா
சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக்கவரி முலைநெரித்துப்
பொழியும் அமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் பேட்டெகினந்
தீம்பால்
பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக்
களிற்றை மணம் புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ.
|