கூருமிகல் சாய்த்த வீரா தீரா தார்மார்பா
கூறுமியல் பார்த்துன் மேலே யாரார் பாடாதார்
மேருவரை நாட்டு வாழ்வார் வானா டாள்வார்போல்
வேளையென்
மீட்டுன் மேலே வீழ்வார் சூழ்வார்பார்
ஆருமிரை
பார்த்து நீள்நீ ருடே தாராமே
யானகழி
நீக்கி மேலேநாவா யோடேசேல்
சேருமலை
வாய்க்கு நாதா தாலோ தாலேலோ
தேவர்சிறை
மீட்ட தேவா தாலோ தாலேலோ.
|