கருணையின் வழிபடு
முதியவள் தனையுயர்
கயிலையி
னொருமுறை உய்த்த விதத்தினர்
கனவட
கிரிமிசை குருகுல மரபினர்
கதைதனை யெழுதிமு டித்த கருத்தினர்
கலைமதி
யினைஇரு பிளவுசெய் தொருபுடை
கதிரெழ
நிறுவிய ஒற்றை மருப்பினர்
கடுநுகர்
பரமனை வலமுறை கொடுநிறை
கனிகவர்
விரகுள புத்தி மிகுத்தவர்
பொருவரும்
இமகிரி மருவிய பிடிபெறு
பொருகளி றெனமிகு பொற்பு விளைத்தவர்
பொதி
அவிழ் நறுமலர் அணைமிசை தமதுடல்
புனகம் தெழவொரு சத்தி தரித்தவர்
பொதுவற
விடுசுடர் முழுமணி யொளிவிடு
பொலிவெழு பவளம தித்த நிறத்தினர்.
புகர்முகம்
உடையவர் குடவயி றுடையவர்
புகழிரு செவியில்நி றுருத்தி வழுத்துதும்
இருமையும் உதவிய
சிவபர சமயமும்
இமையவர் உலகும ளித்த களிப்பனை
இசைமுரல்
மதுகர முறைமுறை பெடையுடன்
இடறிய முகைவிரி செச்சை வனப்பனை
இளகிய
புளகித மலைமுலை யரமகள்
இகலிய புலவிய கற்று மழுப்பனை
இகல்புரி
பரநிசி சரர்குல கலைகனை
எனைவழி யடிமைப டைத்திடு நட்பனை
அருமறை யுரைதரு
பிரமனை அமரரும்
அடிதொழ விடுசிறை விட்ட திறத்தனை
அடியவர்
கொடுவினை துகள்பட நடமிடும்
அழகிய சரணம் அளித்த வரத்தனை
அளவறு
கலவியின் முழுகிய குறமகள்
அழகினில ஒழுகியி ருக்கு மயக்கனை
அலையெறி
திருநகர் மருவிய குமரனை
அறுமுக முருகனை நித்தல் புரக்கவே.
|