பையரவின்
உச்சிகுழி யப்பொருங் குண்டகட்
படுகடற் பணில முத்தம்
பார்வையா னுஞ்சிறிது பாரோம் இதன்றிப்
பசுங்கழை வெடித்த முத்தஞ்
செய்யசிந் தையினுமிது வேணுமென் றொருபொழுது
சிந்தியோ முந்திவட்டத்
திரைமுழங் கக்கொழுந் திங்கள்வட் டக்குடைச்
செழுநிழற் சம்ப ராரி
எய்யுமலர் வாளியை எடுத்துத் தெரிந்துநாண்
இறுகப் பிணித்த வல்வில்
ஈன்றகுளிர் முத்தத்தை முத்தமென் றணுகோம்
இதழ்க்கமல முகையு டைக்குந்
துய்யமணி
முந்தந் தனைத்தொடேம் உன்னுடைய
துகிரில்விளை முத்த மருளே
தோகைமே காரவா கனசெந்தி லாயுனது
துகிரில்விளை முத்த மருளே.
|