அவனி பருகிய மால்திரு உந்தியில்
அமரு மொருபிர மாவெனும் அந்தணன்
அரிய சதுமறை
நாவிலி ருந்தவள்
அளவில் பலகலை யோதியு ணர்தவள்
தவள
முளரியில் வாழ்வுபு ரிந்தவள்
தவள
மணிவட மாலைபு னைந்தவள்
தவள
வடிவுள வாணிசு மங்கலி
தனது
பரிபுர பாதம் இறைஞ்சுதும்
உவரி முதுதிடர்
பாயவி டம்பொதி
உரகன் மணிமுடி தூள்பட மந்தரம்
உலைய எறிசுழல்
மாருதம் எங்கணும்
உதறு சிறைமயில் வாகனன் இன்புறு
கவரில் வரிவளை
சூல்கொடு தங்கிய
கமட முதுகினில் ஏறநெ டுந்திரை
கதறு
கடலலை வாய்முரு கன்பெறு
கருணை தருகவி மாலைவி ளங்கவே.
|