மூரிப்ப கட்டு வரிவாளை
முழங்கிக் குதிக்கக் கால்சாய்ந்து
முதிர
விளைந்து சடைபின்னி
முடங்கும் பசுங்காய்க் குலைச்செந்நெல்
சேரிக்
கருங்கை மள்ளர்குயந்
தீட்டி அரிந்த கொத்தினுக்குத்
தெண்முத்
தளப்பச் சிறுகுடிலிற்
சேரக் கொடுபோய் அவர் குவிப்ப
வேரிக்
குவளைக் குழியில்வரி
வெண்சங் கினங்கள் ஈற்றுளைந்து
மேட்டில்
உகுந்த பருமுத்தை
வெள்ளோ திமந்தன் முட்டையென
வாரிக்
குவிக்குந் திருச்செந்தூர்
வடிவேல் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
|