புள்ள மரிந்த
கதிர்ச்செந்நெற்
போரிற் பகடுதனைநெருங்கப்
பூட்டி
அடித்து வைகளைந்து
போதக் குவித்தபொலிக்குவையை
விள்ள அரிய குடகாற்று
வீசப் பதடி தனைநீக்கி
வெள்ளிக் கிரிபோற் கனகவட
மேரு கிரிபோல் மிகத்தூற்றிக்
கள்ளம் எறியுங் கருங்கடைக்கட்
கடைசி பிரித்த மணிமுத்தைக்
களத்தி லெறிய அம்முத்தைக்
கண்டுகுடித்த கட்குவிலை
மள்ளர் அளக்குந் திருச்செந்தூர்
வடிவேல் முருகா வருகவே.
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
|