தேட அரிய
மணியதைஞாண்
சேர்க்க வருக விரற்காழி
செறிக்க வருக திலதநுதல்
தீட்ட வருக மறுகில்விளை
யாட வருக
மடியிலெடுத்
தணைக்க வருக புதுப்பனிநீர்
ஆட்ட வருக நெ்றித்தமுலை
அமுதம் பருகவருக முத்தஞ்
சூடவருக உடற்புழுதி
துடைக்க வருக ஒருமாற்றஞ்
சொல்ல வருக தள்ளிநடை
தோன்ற வருக சோதிமணி
மாட
நெருங்குந் திருச்செந்தூர்
வடிவேல் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
|