இறுகும்
அரைஞான் இனிப்பூட்டேன்
இலங்கு மகர குண்டலத்தை
யெடுத்துக் குழையின் மீதணியேன்
இனியுன் முகத்துக் கேற்பஒரு
சிறுகுந்
திலதந் தனைத்தீட்டேன்
திருக்கண் மலர்க்கு மையெழுதேன்
செம்பொற் கமலச் சீறடிக்குச்
சிலம்பு திருத்தேன் நெறித்துவிம்மி
முறுகு
முலைப்பால் இனிதூட்டேன்
முகம்பார்த் திருந்து மொழிபகரேன்
முருகா வருக சிவசமய
முதல்வா வருக திரைகொழித்து
மறுகு
மலைவாய்க் கரைசேர்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
|