எள்ளத்
தனைவந் துறுபசிக்கும்
இரங்கிப் பரந்து சிறுபண்டி
எக்கிக் குழைந்து மணித்துவர்வாய்
இதழைக்குவித்து விரித்துழுது
துள்ளித்
துடிக்கப் புடைபெயர்ந்து
தொட்டில் உதைந்து பெருவிரலைச்
சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்
தோளின் மகரக் குழைதவழ
மெள்ளத்
தவழ்ந்து குறுமூரல்
விளைத்து மடியின் மீதிருந்து
விம்மப் பொருமி முகம்பார்த்து
வேண்டும் உமையாள் களபமுலை
வள்ளத்
தமுதுண் டகமகிழ்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
|