அணிநெடு மவுலி
எறிசிறு புழுதி
அழகுடன் ஒழுக வருகவே
அடியிடு மளவில் அரைமணி முரலும்
அடியொலி பெருக வருகவே
பணிவிடை
புரிய வருமட மகளிர்
பரவினர் புகழ வருகவே
பலபல முனிவர் அனைவரும் உனது
பதமலர் பரவ வருகவே
பிணிமுக
முதுகில் அரியணை யழகு
பெறவகு முருக வருகவே
பிறைபொரு சடிலர் தமதிட மருவு
பிடிபெறு களிறு வருகவே
மணியிதழ்
ஒழுகும் அமுதுகு குதலை
மழவிடை வருக வருகவே
வளையுமிழ் தரளம் அலையெறி நகரில்
வரபதி வருக வருகவே.
|