மாமோக மண்டலம்
அகற்றிஅறி வென்னுமுழு
மண்டலத் தைத்தொடுத்து
வடவைமுக மண்டலத் தழலா லுருக்கியினன்
மண்டலத் தூடுபுக்குச்
சோமோத
யக்கிரண மண்டலத் தமுதத்
துளித்திவலை பருகியுடலைச்
சோதிமண் டலமென விளக்குமவர் இவனுடைய
துய்யமுக மண்டலத்தை
ஏமோ
கருத்துற இருத்திப் பெரும்பரத்
தெல்லைமண் டலமெய்தலாம்
என்றுகொண்
டிவன்மண் டலச்சக்ர நிலையா
றெழுத்திலீ டேறுவருனக்
காமோ
பெருக்கமென் செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ யாடவாவே
அரவின்முடி நெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
அம்புலீ யாடவாவே
|