முதிரும்இசை
வரிவண் டலம்புகம லாலய
முகிழ்க்குமிரு நாலிதழ்க்குள்
முக்கோண நடுவிலொரு வட்டச் சுழிக்குள்மலர்
முகமண் டலத்துவெயிலால்
எதிருமிருள்
அந்தகா ரப்படலை தள்ளிவந்
தெழும் இரவி மண்டலத்தில்
இன்புற்று
நீவந் தொளிக்குமிடம் அந்தவான்
இரவிமண் டலமுடுக்கள்
உதிருமடு
செருவிலிவன் வேலேறு பட்டவர்
உகந்தபெரு வெளியாகையால்
ஒள்ளமு
துகுத்தபதி னாறுகலை கொள்ளுமுன்
உடலினுங் குறைபடாதோ
அதிருமக
ராழிசூழ் செந்தில்வடி வேலனுடன்
அன்புடலீ ஆடவாவே
அரவின் முடிநெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
ஆம்புலீ ஆடவாவே.
|