காதலால்
எறிதிரைக் கடல்மகளிர் சிறுமகார்
கரையிற் குவித்தமுத்தும்
கருவாய் வலம்புரி யுமிழ்ந்தமணி முத்துமுட்
கண்டல்மடல் விண்டசுண்ணத்
தாதலர
இளவாடை கொடுவருங் கானல்வெண்
சங்குநொந் தீற்றுளைந்து
தனியே உகுத்தபரு முத்தமுந் தன்னிலே
சதகோடி நிலவெறிக்கும்
ஈதலா
லொருசிறிதும் இரவில்லை எவருக்கும்
இரவில்லை நீயும் இங்கே
ஏகினா லுனதுடன் கறைதுடைத் திடுதலாம்
என்பதற் கையமில்லை
ஆதலால்
நீதிபுனை செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
அம்புலீ ஆடாவாவே.
|