விளையுஞ் செழுந்தேன்
உடைந்துமுகை விண்டொழுகு
வெண்டா
மரைப்பொகுட்டு
வேதா முடித்தலை முடிக்குஞ் சடாடவியள்
வெங்கொலை
மடங்கலேறி
வளையும் பனிப்பிறை
மருப்புக் குறுங்கண்நெடு
மயிடாசு
ரன்சிரத்தில்
வலியநடம்
இடுகுமரி பகவதிச ரோருக
மலர்த்தாள்
வணக்கமுறுவாம்
உளையுந் தடந்திரைத்
திமிரதம ரக்குழி
உவர்ப்பறா
மகரவேலை
ஓலியிடுங்
குண்டகழி சுவறிமே டாகவேல்
உள்ளுறை
கழித்துநிருதக்
களையுங்
களைந்துகலன் அணிபுலோ மசைதன்மங்
கலநாண் அளித்தபெருமாள்
கடியமயில் வாகனப் பெருமாள் உவந்தெனது
கவிமாலை கொண்டருளவே.
|