பெரியமா
கத்துள்நீ வருகைஇவள் வஞ்சகம்
பேசுமா கத்துள்வாரான்
பெருகநீ வேலையிற் புகுவாய் இவன்பார்
பிளக்கவோ வேலைவிட்டான்
உரியமா
குணவரையில் உறுவைநீ இவனன்
புறாதகுண வரையேயுறான்
உடலிலே முழுமறு உனக்குண் டிவன்தனக்
கொருமறுவும் இல்லைமீளக்
கரியமா
முகிலிலே மறைவைநீ இவன்நெடுங்
கரியமா முகிலின் மறையான்
கருதிநீ இவையெலாம் உணரிவன் பெருமையைக்
கண்டுநீ அங்கிராதே
அரியமா
தவன்எங்கள் செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
அம்புலீ ஆடவாவே.
|