கங்கையணி
யுஞ்சடையில் வைத்தகுழ விப்பிறைக்
கடவுளா லயமனைத்துங்
கங்குற்
கருங்கடல் கழிந்தவை கறையிற்
கலித்தவால் வளைமுழக்கும்
பங்கய
மலர்ப்பபொகுட் டிதழ்வாய் துளிக்கும்
பசுந்தேறல் உண்டுமெள்ளப்
பலகோடி சஞ்சரீ கப்படலை பெடையொடு
படிந்துபல கால்முழக்கும்
வெங்கய
முடக்கும் புழைக்கர நிமிர்த்துவெளி
மேகநீ ரைக்குடித்து
வீதிவாய் நின்றுபிளி றித்தின முழக்கும்வெறி
வெண்திரைக் குண்டகழியிற்
செங்கயல்
முழக்குந் திருச்செந்தில் வேலனே
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
|