பொன்னின்
மணக்கும் புதுப்புனலிற்
புடைசூழ் பணில முத்தெடுத்துப்
புறக்கோட்ட டகமுண் டாக்கிவலம்
புரியைக் தூதைக் கலமமைத்துக்
கன்னி
மணக்குங் கழனியிற்செங்
கமலப் பொகுட்டு முகையுடைத்துக்
கக்குஞ்
செழுந்தேன் உலையேற்றிக்
கழைநித் திலவல் சியைப்புகட்டிப்
பன்னி
மணக்கும் புதுப்பொழிலில்
பலபூப் பறித்துக் கறிதிருத்திப்
பரிந்து
சிறுசோ றடுமருமை
பாராய் அயிரா வதப்பாகன்
சென்னி
மணக்குஞ் சேவடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே
திரைமுத்
தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
|