ஆடுங் கொடித்தேர்
எழுபுரவி
அருணன் நடத்தும் அகலிடத்தை
அடைவே படைத்தும் படைத்தபடி
அளித்துந் துடைத்தும் முத்தொழிலுங்
கூடும்
பெருமை உனக்குளது
கூடார் புரத்தைக் குழாம்பறிக்கக்
கொள்ளுங் கருத்து நின்கருத்துக்
கொங்கை சுமந்து கொடிமருங்குல்
வாடுங் கலக விழிமடவார்
மலர்க்கை சிவப்ப மணற்கொழித்து
வண்டல்
இழைத்த மனையழிக்கை
வன்போ சுரரும் மகவானும்
தேடுங்
கமலத் திருத்தாளால்
சிறியேம் சிற்றில் சிதையேலே
திரைமுத்த
தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
|