களிப்பார்
உன்னைக்கண் டவரவரே
கண்ணு மனமும் வேறாகிக்
கள்ளன் இவனை நம்முடைய
காதல் வலையிற் கட்டுமென
விளிப்பார் விரகம் அங்குரித்த
வேடப் பலிப்பைப் பாரென்று
மெள்ள நகைப்பார் இவருடனே
விளையா டாமல் வேறாகித்
துளிப்பார் திரைக்குண் டகழுடுத்த
தொல்லைப் பதியும் பகிரண்டத்
தொகையும்
தொகையில் பல்லுயிருந்
தோற்றம் ஒடுக்கந் துணையாய்நின்
றளிப்பாய் அழிக்கை கடனலகாண்
அடியேஞ் சிற்றில் அழியேலே
அலைமுத் தெறியுந் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே.
|