கொந்தவிழ்
தடஞ்சாரல் மலயமால் வரைநெடுங்
குடுமியில் வளர்ந்த தெய்வக்
கொழுந்தென்ற லங்கன்றும் ஆடகப் பசுநிறங் கொண்டுவிளை யும்பருவரைச்
சந்தன
நெடுந்தரு மலர்ப்பொதும் பருமியல்
தண்பொருநை மாந தியுமத்
தண்பொருநை பாயவிளை சாலிநெற் குலையுமச்
சாலிநெற் குலைப டர்ந்து
முந்தவிளை யும்பரு முளிக்கரும் பும்பரு
முளிக்கரும் பைக்க றித்து
முலைநெறிக் கும்புனிற் றெருமைவா யுஞ்சிறுவர்
மொழியும் பரந்த வழியுஞ்
செந்தமிழ் மணக்குந் திருச்செந்தில் வேலனே
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே.
|