பெருமையுடன் நீள்தலத்
திருவர்பர சமயமும்
பேதம் பிதற்றி விட்ட
பிறைமருப் புக்கரும் பகடுமுந் நீரிற்
பிழைத்தநீள் கரையி லேறப்
பொருவருஞ் சந்நிதியி லெய்துவது போல்மணி
புடைக்குமிள நீரி ரண்டு
புணரியின் மிதந்துசந் நிதியேற விந்நாட்
பொருந்தவிளை யாடி முன்னாள்
இருதிரையி
னிற்சந் தனக்கொடி மரத்தினை
இழுத்துவரும் எருமை ஏற்றை
எப்பொழுது
முதியகற் பகடாக உலகத்தில்
யாவருங் காண வென்று
திருவுள
மகிழ்ந்துதிரு விளையாடல் கண்டநீ
சிறுதேர் உருட்டி யருளே
சேவற்
பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டியருளே.
|