பக்கம் எண் :

210குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

281.
நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் - முன்னைத்தம்
ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார்
தீய செயினுஞ் சில.    
(75)

282.
பிறனன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன்றே யயினு மாக - சிறுவரையும்
நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க வுண்ண்டுங்கு நோய்.    
(76)

    செயலைச் செய்வார். ஆக்கம் பெருகினும் - செல்வம் மேலும் மேலும் பெருகினாலும்; பெருகினும் என்றதனால் பெருகாமை குறிக்கப்பட்டதடு. வேறல்ல - நல்லன ஆகா என்றபடி. தீய செய்வாருக்கு ஆக்கம் பெ ருகினும் அதற்குக் காரணம் தீய செயல்கள் அல்ல, முற்பிறப்பிற் செய்த நல்வினையே யென்று அறிதல் வேண்டும் என்பது கருத்து; “அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான், கேடு நினைக்கப் படும்” (குறள்.169) என்பதும் அதன் உரையும் இங்கே அறிதற்பாலன.

    நா இன்புற நக்கி - நாவினால், நக்கப்படுவார்க்கு இன்பமுண்டாகும்படி நக்கி; ஆமான் நக்குங்காற் பிறக்கும் இனிமையே இங்கே உவமை (சீவக. 189, ந.); “ஆமாபோனக்கி” (நாலடி. 377.) கவயமா - காட்டுப்பசு. கவயமாப் போல் தீயன நல்லன ஆகாவாமென இயைக்க. (பி-ம்.) ‘கவயமாப் போன்ம்”.

    281. சான்றோர் சில தீயவற்றைச் செய்யினும் தம்பெருமை குன்றாரென்பது இதிற் கூறப்படும்.

    செந்நாத் தழும்பிருக்க வென்றது நாத்தழும்பேறும்படி புகழ வென்றபடி; “நாத்தழும் பிருக்க வேத்துமி னீரே” (699); “பூத்தலை யறா அப்பனைகொடி முல்லை, நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்” (புறநா. 200: 9-10.) நாள்வாயும் - நாள்தோறும்; “நாள்வாயு நல்லறஞ் செய்வார்க்கு” (பழமொழி, 6.) செந்நெறிச் செல்வரின் - செம்மையான அறநெறியில் ஒழொகுபவரைக் காட்டிலும். கீழ் அல்லர் - தாழ்ந்தோரல்லர்; ஒப்பவரே யென்றபடி. ஊழ்வலி உன்னி - தாம் தீமை செய்தற்குக் காரணமான ஊழின் வன்மையை நினைத்து. பழி நாணி - உலகத்தார் கூறும் பழிச்சொல்லுக்கு வெட்கமுற்று. உள் உடைவார் - மனம் வருந்துபவர். உள்ளுடைவார் சில தீய செயினும் செந்நெறிச் செலவாரிற் கீழல்லரென இயைக்க.

    282. இதுமுதல் 8 செய்யுட்களால் இன்பம் கூறப்படும்.

    பிறர் மனை நயத்தலின் தீமை இதிற் கூறப்படும்.

    பிறன்வரை நின்றாள் - பிறனது எல்லைக்கண் நின்றவள்; பிறன்மனைவி; “பிறன்வரையாள்” (குறள். 150) என்றார் திருவள்ளுவரும். கடைத்தலைச் சேறல் - அவளது இன்பத்தை விரும்பி அவள் வீட்டு வாயிலிடத்தே