பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை243

நேரிசை யாசிரியப்பா
336.
வேனிலா னுறுப்பின் மென்றசை யிறைச்சி
தீநாக் கறியத் திருக்கண் டிறந்தோய்
நான்மறை முனிவன் கான்முளை நிற்ப
விடற்கரும் பாசமோ டுடற்பொறை நீங்க்
5
உயிருண் கூற்றுக்குத் திருவடி வைத்தோய்
கருங்கடல் வண்ணன் வெள்விடை யாகி
அடிக டாங்கிய வுதவிக் காங்கவன்
முழுவென்பு சுமந்த கழுமுட் படையோய்
தேவா சிரயன் றிருக்கா வணத்து
10
மேவா நின்ற விண்ணவர் குழாங்கள்
உருத்திர கணங்களென் றோடினர் வணங்கி
அருக்கிய முதல வகனமர்ந் தளிப்ப
இத்தலத் துற்றவ ரினித்தலத் துறாரெனக்
கைத்தலத் தேந்திய கன்ன்மழு வுறழும்
15
மழுவுடைக் கைய ராகி விழுமிதின்

    336. (1-2) காமசங்காரச் செய்தி கூறப்படும். வேனிலான் - காமன். இறைச்சியைத் தீயின் நாக்கு அறியும்படி; எரியவென்றபடி.

    (3-5) கலல சங்காரம். நான்மறை முனிவன் கான்முளை - மிருகண்டு மாமுனிவர் புதல்வனான மார்க்கண்டேன்; “மறலியுயிர்குடித்த கான்முளை” (256) என்றார் முன். பாசம் - யம்பாசம். உடற்பொறை - யமனது உடம்பு; அது நீங்கலாவது அவன் இறத்தல். உயிருண் கூற்று; “செல்லாதுயிருண்ணுங் கூற்று” (குறள். 326.)

    (6-8) கங்களா மூர்த்தி. கருங்கடல் வண்ணன் - திருமால். தன்னைத் தாங்கியதற்கு எதிராக அவன் முழுவென்பைத் தாங்கினானென்றார். முழுவென்பு - கங்காளம்; “கங்காளந் தோண்மேலே காதலித்தான் காணேடி” (திருவா.) கழுமுள் - சூலம். கழுமுட் படையோயென்றது, அனைத்தும் ஒரு பெயராய் நின்று சுமந்த வென்பதனோடு இயைந்தது.

    (9-17) திருவாரூரிலுள்ளார் யாவரும் சிவகணங்களாகத் தோற்றுவரென்பது கூறப்படும். இங்ஙனம் தோற்றுதலை நமிந்ந்தியடிகள் புராணத்தால் உணரலாகும்; இது, பற்றியே, “திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்” என்று ஆளுடைய நம்பிகளும் பணித்தனர்.

    தேவாசிரயனென்னும் திருக்காவணம்; இது திருவாரூர்த் திருக்கோயிலுள்ள ஆயிரக்கால் மண்டபம். தேவர்களால் ஆசிரயிக்கப்படுதலின் இப்பெயர் பெற்றது. என்று - எனத் திருவாரூரில் உள்ளவர்களை