வேறு 8. | சுழியுங் கருங்கட் குண்டகழி | | சுவற்றுஞ் சுடர்வேல் கிரிதிரித்த | | தோன்றற் களித்துச் சுறவுயர்த்த | | சொக்கப் பெருமாள் செக்கர்முடி | | பொழியுந் தரங்கக் கங்கைவிரைப் | | புனல்கால் பாய்ச்சத் தழைந்துவிரி | | புவனந் தனிபூத் தருள்பழுத்த | | பொன்னங் கொடியைப் புரக்கவழிந் | | திழியுந் துணர்க்கற் பகத்தினற | | விதழ்த்தேன் குடித்துக் குமட்டியெதிர் | | எடுக்குஞ் சிறைவண் டுவட்டுறவுண் | | டிரைக்கக் கரைக்கு மதக்கலுழிக் | | குழியுஞ் சிறுக ணேற்றுருமுக் | | குரல்வெண் புயலுங் கரும்புயலும் |
8. (அடி, 1) (பி-ம்.) ‘சுழியுண்’. கருங்கட் குண்டகழி - கரிய இடத்தையும் ஆழத்தையுமுடைய கடலாகிய அகழியை. சுவற்றும் - வற்றச் செய்யும். சுடர் வேலை. கிரி - மேருமலை. தோன்றல் - உக்கிர குமார பாண்டின். (பி-ம்.) ‘வேற்கிரி திரித்த’. ‘சொக்கப்பெருமான்’. செக்கர் முடி யென்றார் சடை செந்நிறமுடைமையின்.
(2) (பி-ம்.) ‘விரைபுனல்’. கால் பாய்ச்ச - காலிலே பாய்ச்ச; வாய்க்காலின் வழியே பாய்ச்சவென்பது வேறொரு பொருள். பொன்னங் கொடி - அங்கயற்கண்ணம்மை. சிவபெருமான் ஊடற்காலத்தில் அம்பிகையை வணங்கும் செயலை நினைந்து இச்செய்தி கூறப்பட்டது. கொடி யென்றதற்கேற்பப் புனல்பாய்ச்சலும், பூத்தலும், பழுத்தலும் சொல்லப்பட்டன. “முழுமணி மிடற்றன் கனன்மழு வீரன் முக்கணான் டகைநின தெழில்கூர் - முகம்புலர் தலைக்கண் டுடல்வளைந் தடியின் முனைப்பிறைக் கோடுகொண் டுழுது,. விழுமணி யரவ நுழைசடாடவியின் விண்ணதித் தண்புனல் விடுப்ப - விரைவொடு குளிர்ந்து முகமலர் தலினான் மென்கொடி யெனநினை யுணர்ந்தேன்” (பெரிய நாயகியம்மை விருத்தம், 1) என்பது இங்கே அறிதற்குரியது.
(3) துணர் - பூங்கொத்து. நறவு - வாசனை. எதிரெடுக்கும் - கக்கும் உவட்டுகிற - தெவிட்ட. இரைக்க - ஒலிப்ப. கரைக்கும் - கரைந்தோடச் செய்யும்.
(4) வெண்புயல் - ஐராவதம் கரும்புயல் - கரியமேகம். குலைய - குலையும்படி. குலிசம் - வச்சிராயுதம். புத்தேள் - இங்கே இந்திரன்.
|