பக்கம் எண் :

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை541

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை

நேரிசை வெண்பா
1.
சீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்
கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்
ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசிய
வைய மொருங்கீன்ற மான்.

        கட்டளைக் கலித்துறை
2.
மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்
பாகந் தரவொர் படிவமுண் டேபர மானந்தமே
ஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்த
ஆகந் தருவது மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே.

        நேரிசை வெண்பா
3.
அங்கம் பகுந்தளித்த வம்பலத்தார்க் காம்பலங்கைச்
சங்கொன்று கொங்கைத் தழும்பொன்றே - நங்கையுனை
வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு
உந்திப்பா ரேழு மொருங்கு.

    1. கார் - ஆணவவிருள். மான் நெஞ்சகமாக் கைக்கொண்டான்.

    2. மாகம் - ஆகாயம்; “மலைவில்லியார் விண்ணுரு நனைத்து” (குமர. 87). ஏகம் - ஒன்று. அவர்க்கு எண்ணிறந்த ஆகம் தருவதென இயைக்க; எண்ணிறந்த ஆகம் - இருபத்தைந்து, அறுபத்து நான்கு ஆகிய மூர்த்தங்கள்.

    3. ஆம்பற்பூ உள்ளங்கைக்கு உவமை. சங்கு - வளை; இங்கே அதன் தழும்பு. மற்று: அசைநிலை. திருவுந்தியிலே வாய்த்த. சிவகாமி அம்மை தன்னை வந்திக்கும் அடியார்க்கு உலகேழும் அளிப்பாளென்றபடி.