பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்59

தாலாட்டி யாட்டுகைத் தாமரை முகிழ்த்தம்மை
   சப்பாணி கொட்டியருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
   சப்பாணி கொட்டியருளே.    
(5)

வேறு
39.
வானத் துருமொ டுடுத்திரள் சிந்த
   மலைந்த பறந்தலையில்
மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர்
   மற்றவர் பொற்றொடியார்

பானற் கணையு முலைக்குவ டும்பொரு
   படையிற் படவிமையோர்
பைங்குடர் மூளையொ டும்புதி துண்டு
   பசுந்தடி சுவைகாணாச்

சேனப் பந்தரி னலகைத் திரள்பல
   குரவை பிணைத்தாடத்
திசையிற் றலைவர்கள் பெருநா ணெய்தச்
   சிறுநா ணொலிசெய்யாக்

    (4) முகிழ்த்து - குவித்து.

    (முடிபு.) குழந்தையைக் கிடத்திக் குளிப்பாட்டிப் பொற்றி இட்டு ஆட்டி நெரித்து ஊட்டித் திமிர்ந்து வளர்த்தி ஏற்றித் தாலாட்டி ஆட்டுகை. கைத்தாமரை முகிழ்த்துக் கொட்டியருள்.

    39. தடாதகைப் பிராட்டியார் திக்குவிசயம் செய்கையில் ே்தவர் படைகளோடு அமர்புரித செய்தி இதிற் கூறப்படும்.

    அம்பிகையின் படையில் உள்ள சிலர் போரில் உயிர்துறந்து சுவர்க்க வாழ்வு பெறுதலும், தேவர் உடல் அழிய அவற்றைப் பேய்கள் உண்ணுதலும் இதிற் காணப்படும்.

    (அடி, 1-2) உரும் - இடி. பறந்தலை - போர்க்களம். மண்ணவர் - பிராட்டியாருடைய படையில் இருந்த வீர்ர்கள் மணீந்தவராய். அவர் பொற்றொடியார் - தெய்வப் பெண்கள். பானற்கணை - கண். முலையாகிய குவடு. மண்ணவர், வாளின் மறிந்தவராய்த் தெய்வக் பெண்களுடைய கண்களும் தனமுமாகிய பெருபடையிற் பட; வீரசுவர்க்கத்தையடைந்து தெய்வப்பெண்களின் நலந்துய்த்தாரென்றபடி. தடாதகைப் பிராட்டியாரது படையிலுள்ளோரிற் சிலர் உயிர் நீப்பினும் பகைஞருடைய பொருளைக் கவர்ந்தனரென்றது ஒருநயம். இமையோரது குடர். இதுவரை உண்ணப்படாமையின் ‘புதிதுண்டு’ என்றார். பசுந்தடி - பச்சை நிணம்.

    (3) சேனம் - பருந்து. அலகைத் திரள் - பேய்க்கூட்டம். குரவை - கைகோத்தாடல்; இங்கே பேய்க்கூத்து. (பி-ம்.) ‘சில குரவை’.