(121)
என்னும் தோழிகூற்றில் யானையெய்த திருவிளையாடற்செய்தி வந்துள்ளது.
பழியஞ்சுஞ் சொக்கரென்பது மதுரேசருக்கு ஒரு திருநாம்ம் பழியஞ்சிய திருவிளையாடலால் உண்டாகியது இது. தலைவியின் நிலையை அப்பெருமான்பால் முறையிடும் செவிலி, “உலகத்தில் நீரே பழியஞ்சியாராதலின் உம்மையன்றி வேறு யாரிடம் இவள் துன்பத்தை உரைப்போம்?” என்றும், “தலைவிக்கு அருள் செய்யாமையால் அவள் உயிர்விட்டாளென்னும் பெண்பழி இப்பழியஞ்சியார்க்கு வந்ததே” (158) என்றும் கூறுகின்றாள். “பழியஞ்சு சொக்கருக்குப் பெண்பழிகொள் பாவமே பாவம்” (133) என்று தோழி இயம்புகின்றாள்.
தலைவி காமநோயால் உடல்வெம்பிக் கிடக்கையில் தோழியொருத்தி அவள்மேல் திருநீற்றைத் தடவுகின்றாள்; அதுகண்ட தலைவி, “அன்று ஞானசம்பந்தர் கூன்பாண்டியருக்குத் திருநீற்றைத் தடவயதுபோல் என்மேல் நீ தடவுகின்றாயே;