காசிக் கலம்பகம்467

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
606.
விடுத்த வாளிக்கும் விரகிலாக்
     கருப்புவில் வீணன்மீ ளவும்வாளாத்
தொடுத்த வாளிக்கு மேபகை
     மூண்டதித் தூயநன் மொழிக்கென்னாம்
அடுத்த நான்மறை முனிவரர்
     நால்வர்க்கு மம்மறைப் பொருள்கூற
எடுத்த கோலமா யானந்த
     வனத்துமெம் மிதயத்து மிருந்தோனே.    
(8)

கட்டளைக் கலித்துறை
607.
இருப்பா ரவிமுத்தத் தெங்கேகண் மூடுவ ரென்றும்வெள்ளிப்
பொருப்பாள ரோடித் திரிவதெல் லாமிப் புவனங்களை

    606. தோழி கூற்று.

    முதலில் மன்மதன் விடுத்த வாளிக்கும்; வாளி - அம்பு. விரகு - நுண்ணறிவு: உபாயமுமாமை. வீணன் - மன்மதன். வாளா - சும்மா. முதலில் விடுத்த பாணங்களே தலைவியைக் கொல்லப் போதியன வாதலின், அதனை அறியாமல் மீண்டும் அம்பு தொடுத்தமை பற்றி மன்மதனைத் தோழி வீணனென்றாள். பாணந்தொடுத்தல் பயனற்றதாதலின் வாளாவென்றாள்.மன்மதன் எய்த ஒரே இனத்தைச் சேர்ந்த அம்புகளுள் முன்பு எய்தவற்றிற்கும், பின்பு எய்தவற்றிற்கும் பகைமை யுண்டாகச் செய்தே இவள் திறத்தில் அவை என்ன துன்பத்தைச் செய்யும். நால்வர் - சனகராதியோர். நால்வர்க்கு மறைப்பொருள் கூறியது: “நண்ணியொர் வடத்தினி. னால்வர்முனி வர்க்கன், றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவர்” (தே. திருஞா. திருவையாறு). உயர்ந்த ஆனந்த வனத்திலும் இழிந்த அடியேங்கள் இதயத்தும் ஒப்ப இருந்தோனே; சிறைவான் புன்றறில்லைச் சிற்றம் பலத்து மென் சிந்தையுள்ளும், உறைவான்” (திருச்சிற். 20, பேர்.) என்பதையும் அதனுரையையும் பார்க்க; ஆனந்தவனம் - காசி.

    607. அவிமுத்தத்து இருப்பார். வெள்ளிப் பொருப்பாளர் - கைலையங்கிரியில் உறைபவரான அகிலேசர். உருப்பாதி - அம்பிகையின் பாகம் (643). ஓர்பாதி - மற்றொரு பாதியாகிய தம்முடைய பாகம். துடைத்து - அழித்து. ஆருயிர்களின்மேல் விருப்பத்தை வைத்து; அழிப்பதும் அநுக்கிரகச் செயலாதலின் இங்ஙனம் கூறினார்; “இன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலு மீன்றெடுத்த, அன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற்கேயன்றே” (548). ஓடித் திரிவதெல்லாம் வேலைகண்டே; கண்டு -