47. | வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் |
| தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த |
48. | வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த |
| பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் |
49. | தேவர்க் குதவுந் திருக்கரமுஞ் சூர்மகளிர் |
| மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது |
50. | மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் |
| சேர வணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் |
51. | வைத்த கரதலமும் வாம்மருங் கிற்கரமும் |
| உய்த்த குறங்கி லொருகரமும் - மொய்த்த |
52. | சிறுதொடிசேர் கையுமணி சேர்ந்ததடங் கையும் |
| கறுவுசம ரங்குசஞ்சேர் கையும் - தெறுபோர் |
53. | அதிர்கே டகஞ்சுழற்று மங்கைத் தலமும் |
| கதிர்வாள் விதிர்க்குங் கரமும் - முதிராத |
48. வேரி - தேன், விரைக் குரவும் - மணத்தையுடைய குராமலரும், புய சயிலம் - மலைபோன்ற தோள்கள். 49. இதுமுதல் திருக்கரங்களின் செயல்கள் கூறப்படும்.
சூர்மகளிர் - தேமகளிர், மேவ-விரும்ப, ஓவாது-ஒழியாமல்.
51. வாம மருங்கில் - இடையின் இடப்பக்கத்தில். குறங்கில் - திருத்துடையில்.
52. தொடி - வீரவளை.
53. விதிர்க்கும் - அசைக்கும்.
49-53. இங்கே கூறப்பட்ட திருக்கரங்களின் செயல்கள், “விண்செலன் மரபினையர்க் கேந்திய, தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை, நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசையசைஇய தொருகை, அங்குசங்