முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
இரையும் புனற்செஞ் சடைமுடியுங் கடுவார் மிடறு மிளமதியம்
புரையுங் கனலி மருப்பொளிருந் திருமார் பகமும் புலியதள்சூழ்
அரையுங் கரியின் றலைமிதித்த வழகார் வெங்கை யரன்றாளும்
நிரையுஞ் சுரர்கண் டுருவனைத்து மருளே யென்ன நினைவாரே.
(99)
நேரிசை வெண்பா
நினைகுவதுன் கோலமே நெஞ்சத் தடியேன்
புனைகுவதுன் செங்கமலப் பொற்றாள் - வினவுவது
கோவே யெனவிண் குழாம்புகழும் வெங்கைநகர்த்
தேவே யுனதொழிவில் சீர்.
(100)
பதினான்குசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
விற்ற தார்கலை பாதி யோடுவ
       னத்தி லேயழ விட்டதார்
வெஞ்சி றைப்புக விட்ட தார்துகி
       லூரிய விட்டுவி ழித்ததார்
உற்ற தாரமும் வேண்டு மென்றினி
       மன்னர் பெண்கொள லொண்ணுமோ
வுமிய டாமண மென்ற வாய்கிழித்
       தோலை காற்றிலு ருட்டடா
வெற்றி யாகிய முத்தி தந்தருள்
       வெங்கை மாநகர் வேடர்யாம்
விமல ரானவ ரெமைய டுத்தினி
       தெங்கண் மிச்சின்மி சைந்தபின்
பெற்ற வேலர்த மக்கு யாமொரு பெண்வ
       னர்ப்பினி லீந்தனம்
பெற்ற பிள்ளைகொ டுப்ப ரோவிதென் பேய்பி
       டித்திடு தூதரே.
(101)

99. இரையும்-ஒலிக்கும். கடு-நஞ்சு. புரையும்-ஒக்கும். கனலி-பன்றி. அதள்-தோல். நிரையும்-கூட்டமாகிய. 100. கோலம்-திருக்கோலம். புனைகுவது-சூடுவது. விண்குழாம்-தேவர்கூட்டம். ஒழிவில்சீர்-என்றும் விட்டு நீங்காத சிறப்பு. 101.(தனிச்செய்யுட்கள்) கலை-ஆடை. துகில் உரிய-ஆடையைக் கழற்ற. தாரம்-மனைவி. மிச்சில்-எச்சில். மிசைந்தபின்-உண்டபின்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்