12. இட்டலிங்க அபிடேக மாலை |
|
|
[இட்டலிங்கமாவது தாம் எப்பொழுதும் உடனிருத்தி வழிபட்டுவரும் இலிங்கமாகும். இத்தகைய இலிங்கத்தை வீர சைவர்கள் மார்பில் அணிந்திருப்பர். அத்தகைய இலிங்கத்திற்குத் திருமுழுக்குச் செய்தபோது அடிகளார் இம்மாலையைப் பாடியருளினார். இம்மாலை பத்துச் செய்யுட்களால் அமைந்தது. சிறந்த தத்துவப் பொருளைத் தன்னகத்தே கொண்டது.] |
|
|
|
பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
பந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு பதினொருவர் மிளிர்பீடமேற் படியிலை யைவைகைப் படுமீசர் தாநிதம் பத்திலெண் வித்தையிறைவர் சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா தாக்கியம் மூர்த்திவதனந் தட்டற்ற வட்டத்தி லொட்டற்ற சிற்சத்தி தாளுற்ற நாளத்திலே நந்தலற வருகோள கந்திகழ் சிதம்பர நற்சிகையி னிற்சூனிய நட்டமற வமைகின்ற விட்டவடி வொடுநின்ற ஞானமய மோனநடுவோ டந்தமற முந்துபர மானந்த நீநந்த வபிடேக மாடியருளே அறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
|
(1) |
|
|
|
1. சிவலிங்கமே எவ்வகை மூர்த்திகளுக்கும் மூலமென்கிறது இச் செய்யுள்.
|
|
|
|