|
அறிவுயிர் கரண முடலொடு பொறிகள் சிவமென வுதவு தானியைக் காத்தெமர் வழிவழி யடிமை யெனவருள் புரியு மொருவனை யெமது பாவனைக் கேற்றிடு மமுதினை மணியை யடியவ ருயிரை யுயர்சிவ சமய நாதனைப் பார்த்துறு குறிகுண நிலைகள் குருசிவ சரணர் தமையிகழ் பவரை வேறெனத் தாக்கியை வளர்தரு தனது குணவருள் கனலி னழல்புனன் மருவு மாறெனத் தாட்டுணை குறுகிடு பவரை யடைவுற வுலகின் வருசென வசவ தேவனைப் போற்றுதும் பொறியொரு புடையில் வளையொரு புடையி லிரவியி னிருளை நாமறத் தீர்த்தெரி மணிமிளிர் திகிரி யொடுபல வணிகண் முடியொரு புடையி லாருயிர்க் காப்புறு புயனிற வடிவ வரியொரு புடையில் விழவர வணையை வானுறத் தூக்குபு மறிதிரை கதறு கடலிடை யுதறு பொறிமயில் கடவு வீரன்மெய்ச் சீர்த்தியன் மலைமுனி முருக குருபர குமர சரவண பவவெ னாமிகப் போற்றிட மறைமொழி யருள்செ யறுமுகன் மருவு மயிலைவ ருசிவ ஞானியைக் காக்கவே.
|
(10) |
|