முகப்பு தொடக்கம்

 
புயவகுப்பு
அத்தி யொடுமாறு பட்டுத் திகழ்ந்தன
       வன்று தமிழ்மூவர் வைப்பச் சுமந்தன
புந்தி மகிழ்மாது கட்டக் குழைந்தன
       புண்ட ரிகமாலை யுற்றுக் கிடந்தன
நந்து தலைமாலை யிட்டுச் சிறந்தன
       நன்றி மறைநாலு மற்பிற் புகழ்ந்தன
விந்த மகமேரு வொப்பக் கிளர்ந்தன
       வெங்கை புரிநாதர் வெற்றிப் புயங்களே.
(23)