| 
   
    |  | அணங்க வெம்மைப் பிடித்திருந்த வவாப்பே யகன்று குடிபோக வருள்செ யொருமந் திரவாதி யாகிப் பாச வல்லிருளைப்
 பிணங்கு மொருசெஞ் சுடராகிப் பிறவிப் பிணிக்கு மருந்தாகிப்
 பிறந்த வன்புக் குழவிக்குப் பெற்ற தாயா யிடும்பைச்சே
 றுணங்க வெழுசெங் கதிராகி யுழலுஞ் சமயக் கடாக்களிற்றை
 யுடற்று மரிமா னேறாகி யுவந்து தமியே நறுமலர்தூய்
 வணங்க வொருதே வாய்க்கருணை வடிவே வருக வருகவே
 மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
 
 | (2) |  |