|
அற்றங் களையு நின்பெருஞ்சீ ரறைந்த செந்தா விவ்வுலகி லயலோர் மொழியு மறையாம லன்பா னின்பாற் பற்றுமுளம் பற்றொன் றிங்கட் செயாமலுனைப் பார்த்த விழிகள் பிறபொருளைப் பாரா துன்சொற் கேட்டசெவி பயனில் பிறசொற் கேளாமல் உற்றுன் றிருத்தாட் குற்றேவ லுஞற்று கரங்கள் பிறிதொன்றை யுஞற்றா துள்ள படிசுட்டா துன்னை யுணர்ந்த பேருணர்வு மற்றொன் றினையிங் குணராமல் வந்த குரவா வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(8) |
|