|
அரிமதர் மழைக்கண் வளர்வா ரவிரறன் மருட்டு குழல்வா னனிம தி கவற்று நுதல்வே யனவொளிர் மணித்தொ டியதோள் வரியளி மிடிக்கு மிடியா மதுமடை திறக்கு மலர்வாண் மதிமுக மலர்க்கு முதம்வீழ் மணியிதழ் வளைத்த சிலைதாழ் முரிபுருவ முத்து நகைநேர் முகிழ்முலை வளைக்கை மடவார் முதிர்படை யெழுச்சி மதவேண் முரசதிர் முழக்க மறவே திரிவறு தவத்த ரசநீ சிறுபறை முழக்கி யருளே சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.
|
(6) |
|