முகப்பு தொடக்கம்

 
பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அடிமலர் சிவப்ப நடந்துள முனிந்த
       வணங்கினைக் கூட்டுதல் வேண்டா
வடியனேன் றமிழ்க்குக் கலந்துட னிருந்த
       வரிவையைப் பிரிவுசெய் திடுக
மிடிமலி வறிய செங்கல்பொன் னாக்கி
       வியப்புற வுதவுதல் வேண்டா
வெந்தெரி பசும்பொன் செங்கலாக் குகநீ
       வேறுனை வேண்டுவ திலையே
பொடிமறை தழல்போ லிருந்துல கினர்கட்
       புலப்படா னுயர்சிவ ஞானி
புவியிலென் றிருப்ப வனையன்யா னென்று
       பொங்கொளி யிரவிபோற் றோன்றிக்
கடிநக ரெவற்றுஞ் சிறந்தபொற் புரிசைக்
       காஞ்சியிற் போந்தகற் பகமே
கதிர்மணி வரன்றி யருவிவந் திழியுங்
       கயிலைநேர் மயிலைகா வலனே.
(4)