முகப்பு தொடக்கம்

 
கட்டளைக்கலித்துறை
அவனோ விவனென் றெனையாளு மண்ண லடியவர்தம்
பவநோ யகற்றுஞ் சிவஞான தேசிகன் பாரில்வருஞ்
சிவனோ விவனென் றுலகமெ லாந்தொழுந் தெய்வமன்றி
எவனோ தமிய னிதயா லயத்தி லிருப்பவனே.
(15)