முகப்பு தொடக்கம்

 
வாழ்த்து
அருள்பொழி விழிகள் வாழி யறம்பகர் பவளம் வாழி
இருள்புரை தமியே னுள்ளத் தெழுந்துபே ரொளியாய் நின்ற
குருபரன் காஞ்சி வாஞ்சை கொள்சிவ ஞான தேவன்
திருவடி வாழி யன்னான் றிருப்புகழ் வாழி வாழி.
 
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
அறிவதை யறிந்தார் மூவ ரறுமுகக் குரவன் றன்பால்
முறைவரு வருண முற்று முக்கணான் குருவென் றன்பு
செறிகிலன் மலய வெற்புச் செஞ்சடை முனிவன் யாக்கை
குறியவன் குறுகி லானெங் கோன்சிவ ஞானி தானே.
(93)