முகப்பு தொடக்கம்

 
மடக்கு, அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஆசை தனதாண் மூட்டினா னடித்திட் டமுத மூட்டினான்
பாச விருளை யகற்றினான் பதிசே ரறிவை யகற்றினான்
தேசு மலியு மாகத்தன் சிவஞா னிப்பேர் மாகத்தன்
நேச மருவி மறியாரே நிரயத் துயர மறியாரே.
(17)